Page Loader
சமந்தா நடிக்கும் சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

சமந்தா நடிக்கும் சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 07, 2023
12:43 pm

செய்தி முன்னோட்டம்

கவி காளிதாசரின் படைப்பான 'சகுந்தலை' நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, தற்போது அறிவித்துள்ளது. படத்தின் நாயகியாக சமந்தா நடித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாயின. மக்கள் அனைவரும், சமந்தாவின் உழைப்பையும், நடிப்பையும் பாராட்டினர். இம்மாதம் 17-ம் தேதி, 3டி-யில் இந்த படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காரணமேதும் தெரிவிக்கப்படாமல், மறுதேதி குறிப்பிடப்படாமல், படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படம், தென்னிந்தியாவின் 4 மொழிகளிலும், ஹிந்தியிலும் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர்கள், அறிவிக்கப்பட்டபடி, 17 -ஆம் தேதி சாகுந்தலம் படத்தை வெளியிட முடியவில்லை என்றும், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

சாகுந்தலம் ரிலீஸ் ஒத்திவைப்பு