Page Loader
சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது
சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு

சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 17, 2023
06:35 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சரித்திர படமான 'சகுந்தலா' வின் முதல் பாடல், நாளை (ஜனவரி 18 ) வெளியாகும் என அப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர். மணிஷர்மாவின் இசையில், 'சகுந்தலா' படத்தின் முதல் பாடலான, 'மல்லிகா' நாளை வெளியாகவிருக்கிறது. கதையின் நாயகியான சகுந்தலா கதாபாத்திரத்தில், சமந்தா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, மலையாள நடிகர் தேவ் மோகன், துஷ்யந்த மகாராஜா வேடத்தில் நடிக்கிறார். இப்படம், கவி காளிதாசரின் படைப்பான 'சகுந்தலை' நாடகத்தை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. 5 மொழிகளில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் குணசேகர் இயக்குகிறார். இந்த படம், அடுத்த மாதம், பிப்ரவரி 17-ம் தேதி, 3டி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'சாகுந்தலம்' படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு