சாகுந்தலம் படத்தை பற்றி சமந்தா தந்த புதிய அப்டேட்
செய்தி முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா.
தென் இந்தியாவில் இவர் தனிக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.
சமந்தா நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர் இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள்.
அதன் பிறகு, சமந்தாதொடர்ந்து தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்.
இடையில், அவர் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதன்பின் வெளிவந்த சமந்தாவின் யசோதா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்திலும் வெளியானது.
விரைவில் டிரைலர்
சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகிறது
இந்நிலையில் அடுத்ததாக இவர் நடிப்பில் உருவான சாகுந்தலம் படம் வெகுவிரைவில் வெளியாக தயாராகிக் வருகிறது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மதம் 17-ந்தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படம் மகாகவி காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகமான அபிஞான சாகுந்தலம் என்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற 5 மொழிகளில் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் புதிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
அதன்படி சாகுந்தலம் படத்தின் ட்ரைலர் ஜனவரி 9-ம் தேதியன்று 12.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு ஒரு புதிய போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது.