Page Loader
சத்தமில்லாமல் செல்வராகவன் செய்த காரியம்.. 7ஜி ரெயின்போ காலனி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
7ஜி ரெயின்போ காலனி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சத்தமில்லாமல் செல்வராகவன் செய்த காரியம்.. 7ஜி ரெயின்போ காலனி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 01, 2025
06:35 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் செல்வராகவன் அழுத்தமான திரைக்கதையாக பெயர்பெற்றவர். அவரின் பல படைப்புகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு முக்கியமான காதல் படமாக கருதப்படுவது 7G ரெயின்போ காலனி. இப்படம் மட்டுமின்றி அதன் பாடல்களும் மிகப்பெரிய ஹிட். படத்திற்கு இசையமைத்ததிருந்தது யுவன் ஷங்கர் ராஜா. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தில் நடித்திருந்த ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வாலின் பேட்டி வைரலானது. இதன் தொடர்ச்சியாக பலரும் 7G ரெயின்போ காலனியின் இரண்டாம் பாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிவிப்பு

புத்தாண்டு சர்ப்ரைஸாக வெளியான அறிவிப்பு 

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில், 7G ரெயின்போ காலனியின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிட்டார் இயக்குனர் செல்வராகவன். இப்படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாத நிலையில், இணைய தகவல்களின் படி, இந்த படத்தில் ரவிகிருஷ்ணாவே நடிக்கிறார். அதேபோல அனஸ்வரா ராஜன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் போஸ்டர் படி, இப்படத்திற்கு இசையமைத்துள்ளதும் யுவன் ஷங்கர் ராஜா தான். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்ததாகவும் கூறப்படுகிறது. நீண்ட காலத்திற்கு பின்னர், செல்வராகவன் படத்தை இயக்குவதால் இப்படத்திற்கு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.