LOADING...
தனுஷ் 56 (D56): தனுஷுக்கு ஜோடியாகும் 'தெய்வத்திருமகள்' சாரா அர்ஜுன்?
D56-ல் தனுஷுக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்க வாய்ப்பு

தனுஷ் 56 (D56): தனுஷுக்கு ஜோடியாகும் 'தெய்வத்திருமகள்' சாரா அர்ஜுன்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 15, 2026
04:23 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தில் (D56), அவருக்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜுன் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இந்தப் படத்தை இயக்கவுள்ளார். முன்னதாக, இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் இணையும் புதிய படத்தில் நடிக்க அதிக நாட்கள் ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், 'D56' திரைப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு படக்குழு தற்போது சாரா அர்ஜுனை அணுகியுள்ளது.

சர்ச்சை

வயது சர்ச்சை

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, 42 வயதாகும் தனுஷுக்கு, 20 வயதாகும் சாரா அர்ஜுன் ஜோடியாக நடிப்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த 22 வயது வித்தியாசம் கொண்ட ஜோடி, கதையின் தேவைக்காகவா அல்லது வேறேதும் காரணமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங்கிற்கும், சாராவிற்கும் கிட்டத்தட்ட 20 வயதிற்கு மேல் வித்தியாசம் இருந்ததால், ஆரம்பத்தில் இந்த ஜோடியும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. 'தெய்வத்திருமகள்', 'சைவம்' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகித் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்தவர் சாரா அர்ஜுன். சமீபத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'துரந்தர்' படத்தில் கதாநாயகியாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார்.

Advertisement