அடுத்த செய்திக் கட்டுரை

சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு ரீடர்ன்ஸ், ஜூலை 28 வெளியாகிறது
எழுதியவர்
Venkatalakshmi V
Jul 13, 2023
03:11 pm
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில், காமெடியனாக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு' திரைப்படம். ஹாரர்-காமெடி வகையில் உருவான இந்த திரைப்படம், அமோக வெற்றி அடைந்தது.
விஜய் டிவியில் பிரபலமான ஸ்பூப் ஷோவாக வெளியானது 'லொள்ளு சபா'. அதன் மூலம் தான் சந்தானம் பிரபலமடைந்தார். அந்த ஷோவின் இயக்குனர் தான், 'தில்லுக்கு துட்டு' படத்தின் இயக்குனரும் கூட.
அந்த திரைப்படம் தந்த வெற்றி, இப்படக்குழுவினரை, இரண்டாம் பாகம் எடுக்க தூண்டியுள்ளது.
தொடர்ச்சியாக அந்த வரிசையில் தற்போது, 'தில்லுக்கு துட்டு ரீடர்ன்ஸ்' என்ற பெயரில் புதிய ஹாரர்-காமெடி திரைப்படம், சந்தானம் நடிப்பில், வரும் ஜூலை 28 வெளியாகிறது.