
சந்தானத்தின் 'கிக்' திரைப்படத்தை பற்றிய அப்டேட் தெரிவித்த இயக்குனர்
செய்தி முன்னோட்டம்
சந்தானத்தின் அடுத்த படமான 'கிக்' பற்றிய முக்கிய அறிவிப்பை, இன்று (12 ஜனவரி) மாலை 6 மணிக்கு அறிவிக்க போவதாக, அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னட இயக்குனரான பிரசாந்த் ராஜ், சந்தனத்துடன் முதன் முறையாக இணையும் இந்த படம், ஒரு ஆக்ஷன் கலந்த காமெடி படம் என்று பிரசாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் தன்யா போப் மற்றும் ராகினி திரிவேதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நடிகை கோவை சரளா, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஃபார்டியூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
அர்ஜுன் ஜனயா இசையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
ட்விட்டர் அஞ்சல்
சந்தானத்தின் 'கிக்' பட அப்டேட்
Get ready for something special. A walk into the look and feel of #KICK 🤞 coming your way tomorrow at 6.03PM!#கிக் #SantasKick #ActionComedy @iamsanthanam @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj @Fortune_films #ProductionNo10 pic.twitter.com/Exvbv0y72n
— Ramesh Bala (@rameshlaus) January 11, 2023