Page Loader
கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங் 2025இல் தொடங்கப்படும் என்று ஹோம்பேல் பிலிம்ஸ் தகவல்
கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங் 2025இல் தொடங்கப்படும்

கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங் 2025இல் தொடங்கப்படும் என்று ஹோம்பேல் பிலிம்ஸ் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 12, 2023
11:40 am

செய்தி முன்னோட்டம்

KGF 2, காந்தாரா போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஹோம்பேல் பிலிம்ஸின் உரிமையாளர் விஜய் கிரகந்தூர், சூப்பர்ஹிட் கேஜிஎஃப் தொடரின் அடுத்த பாகமான, கேஜிஎஃப் அத்தியாயம் 3 பற்றிய புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். கேஜிஎஃப் 3 படத்தின் படப்பிடிப்பு, 2025 இல் தொடங்கப்படும் என்றும், 2026 க்குப் பிறகு படம் திரைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இந்த படத்துக்கான, முன் தயாரிப்பு வேலைகள் இன்னும் தொடங்கவில்லை, என்றும் அவர் கூறினார். இதோடு, ஜேம்ஸ்பாண்ட் தொடர் படங்களில், வெவ்வேறு ஹீரோக்கள் இருப்பது போல், கேஜிஎஃப் தொடர்களிலும், வெவ்வேறு நடிகர்களை, ஹீரோவாக நடிக்க வைக்க யோசனை உள்ளதாகவும், விஜய் கிரகந்தூர் கூறியுள்ளார்.

சலாரும், கேஜிஎஃப்-உம்

பிரசாந்த் நீல் இயக்கும் கேஜிஎஃப் 3

கேஜிஎஃப் படத்தின் இயக்குனர், பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ் நடிக்கும், சலார் படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். அதன் பின்னர், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விரண்டு படங்கள் முடித்த பின்னர் தான், KGF3 படத்தின் வேலைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சலார் திரைப்படத்தில், KGF நாயகன் யாஷும் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஹோம்பேல் பிலிம்ஸின் காந்தாரா திரைப்படம், ஆஸ்கார் விருதுகள் பட்டியலுக்கு, இந்திய திரைப்பட குழு சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த தயாரிப்பு குழு அந்த வேலைகளில், மும்முரமாக இருக்கிறது.