விஜய் -திரிஷா விவகாரம் குறித்து மனந்திறந்த சமுத்திரக்கனி: வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி, தான் நடித்துள்ள 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து அவர் விமர்சித்ததாகப் பரவிய வைரல் வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த விளக்கத்தில், தான் தனது மனதில் இருந்த வலியை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் மனதில் படத்தையே பேசியதாகவும், இதை மறுப்பதற்கில்லை எனவும் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Reporter: ఒక ఇంటర్వ్యూ లో విజయ్ దళపతి గురించి మీరు చేసిన వ్యాఖ్యలు నిజమేనా? #Samuthirakani: అవును, నా బాధలో నుంచి వచ్చిన మాటలు అవి.#CarmeniSelvam #VijayThalapathy #Thalapathy #Kollywood #Tollywood #Tupaki
— Tupaki (@tupaki_official) March 26, 2026
Follow👉 @tupaki_official pic.twitter.com/5rCpOUdZuZ
பின்னணி
வைரல் வீடியோவின் பின்னணி
சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில், சமுத்திரக்கனி ஒரு தனியார் உரையாடலில் விஜய்யின் இத்தகைய பொது வெளி வருகைகளை விமர்சித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சமுத்திரக்கனி,"அந்த வீடியோ பதிவு செய்யப்படுவது எனக்குத் தெரியும். நான் எதையும் மறைத்துப் பேசவில்லை. என் மனதில் பட்டதை அப்படியே பேசினேன். ஆனால், அந்த வீடியோவை எடுத்தவர் நான் முதலில் பேசியவற்றை விட்டுவிட்டு, இறுதியாகப் பேசியதை மட்டும் பகிர்ந்துள்ளார்." என்றார்.
விளக்கம்
எதற்காக தான் அவ்வாறு பேசினேன் என்பதையும் சமுத்திரக்கனி விளக்கினார்
"விஜய் அரசியலுக்கு வருவதை முதலில் ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். அவர் மீதுள்ள அன்பும், அக்கறையும்தான் அந்தப் பேச்சிற்கு காரணம். என் மனதில் ஏற்பட்ட வலிதான் அந்த வார்த்தைகளாக வெளிவந்தன." "கேமராவைப் பார்த்துப் பேசினால் ஒரு பேச்சு, பின்னால் ஒரு பேச்சு என எனக்குப் பேசத் தெரியாது. அன்று பேசிய கருத்துக்களில் இப்போதும் நான் உறுதியாகவே இருக்கிறேன்," எனத் தெரிவித்தார். விஜய் தற்போது தனது தமிழக வெற்றி கழகம் கட்சியின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த சமுத்திரக்கனி போன்ற ஒருவரின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.