அடுத்தாண்டு ரீ-என்ட்ரி தரவுள்ள சமந்தா
நடிகை சமந்தா, தற்போது சினிமா துறையிலிருந்து தற்காலிக ஓய்வில் உள்ளார். மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, தன்னுடைய உடல்நலனை கவனித்து கொள்வதற்காக, இந்தாண்டு கட்டாய ஓய்வை எடுத்துக்கொண்டு, மயோசிட்டிஸிர்க்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி தன்னுடை மனநலனிற்காக பல ஊர்களுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார். சமீபத்தில், இந்தியா திரும்பிய சமந்தா, மார்வெல்ஸ்-இன் மிஸ் மார்வெல் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி மற்றும் ஒரு இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் செய்தார். பல நாட்களுக்கு பிறகு தங்கள் நாயகி மீண்டும் திரையில் வந்ததை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
சொந்தமாக புரொடக்ஷன் ஹவுஸைத் தொடங்குதல்
இதனை தொடர்ந்து தற்போது பல்வேறு புதிய திட்டங்களுடன் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி தரவுள்ளார் சமந்தா என செய்திகள் வெளியாகியுள்ளன. மீண்டும் நடிக்க வருவதை தாண்டி, சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளார். இது "புதிய காலத்தின் வெளிப்பாடு மற்றும் சிந்தனையை" வெளிக்கொண்டு வரும் என அவர் தெரிவித்துள்ளார். அவரது ஓய்வு நேரமும் பயணங்களும் அவரை தயாரிப்பில் ஈடுபடவும் தூண்டியது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அவரது பேனர் மூலம், அவர் பல்வேறு ஆஃப்-பீட் படங்களை ஆதரிக்கவும், OTT இயங்குதளங்களுக்கான வீடியோக்கள் தயாரிக்கவும், அவற்றோடு கூட்டு முயற்சியாக வெப் தொடர்களை தயாரிக்கவும் சமந்தா விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது
இந்த நிலையில், நேற்று ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக நடிகை சமந்தா கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இருக்கா என கேள்வி எழுப்பினார். இதற்கு புள்ளி விவரத்துடன் பதில் அளித்துள்ளார் சமந்தா. அவர் பகிர்ந்த புள்ளி விவரத்தின் படி அது தவறான முடிவு என தெரிவித்துள்ள சமந்தா, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 50% என்றும், இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 67% எனவும், மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 73% என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தனக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் சாம்.