
கோடிக்கணக்கில் நஷ்டம் - சமந்தாவை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்!
செய்தி முன்னோட்டம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அவர் நடிப்பில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான படம் தான் சாகுந்தலம். இப்படமானது, தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் வெளியானது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில், காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை சகுந்தலம் என்ற பெயரில் இப்படத்தை உருவாக்கினார்.
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சகுந்தலம் நஷ்டம்
22 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த சாகுந்தலம் - தயாரிப்பாளர் வேதனை
சாகுந்தலம் படத்திற்கு சம்பளமாக சமந்தா 6 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், தயாரிப்பாளர் தில் ராஜு 22 கோடி ரூபாய் இழந்ததாக தெரிவித்துள்ளார். சாகுந்தலம் படம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், 7 கோடி ரூபாய் அளவு கூட இப்படம் வசூலை எட்டவில்லை. மேலும், வெளியாகும் முன்பே சாட்டிலைட் நிறுவனத்திடம் 35 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டது.
இருந்தாலும், அவரால் அந்த ஒப்பந்தத்தை முடிக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
25 வருடத்தில் இவ்வளவு பெரிய நஷ்டத்தை சந்திக்கவில்லை எனவும், சமந்தா ராசி இல்லாத நடிகை எனவும் தயாரிப்பாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.