அடுத்த செய்திக் கட்டுரை

திரைத்துறையில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா; நன்றி கூறி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு
எழுதியவர்
Venkatalakshmi V
Feb 27, 2023
04:51 pm
செய்தி முன்னோட்டம்
சமந்தா ரூத் பிரபு திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சிறிய வேடத்தில் தோன்றிய சமந்தா, முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது, 'மாஸ்கோவின் காவேரி' படத்தில் தான். ஆனால் அந்த படம் பல காரணங்களினால் தள்ளிப்போக, விண்ணைத்தாண்டி வருவாயா, சமந்தாவின் முதல் படமாக அமைந்தது.
அதன் தெலுங்கு பதிப்பில், திரிஷா வேடத்தில் நடித்திருந்தார் சமந்தா. தொடர்ந்து அதர்வாவுடன் 'பாணா காத்தாடி' படத்தில் நடித்தபோதுதான், தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானார்.
அதன் பின்னர், தமிழ், தெலுங்கு என பல வெற்றி படங்களில் நடித்து, தற்போது, இந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக கோலோச்சி கொண்டிருக்கும் சமந்தா, 13ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நன்றி கூறும்விதமாக ஒரு உணர்ச்சிபூர்வமான பதிப்பை, தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.