
'சிக்கந்தர்' படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் AR முருகதாஸின் கருத்துக்கு சல்மான்கான் பதிலடி
செய்தி முன்னோட்டம்
'சிக்கந்தர்' படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வந்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை குற்றம் சாட்டியதற்கு நடிகர் சல்மான்கான் இப்போது பதிலடி கொடுத்துள்ளார். பிக் பாஸ் 19 நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வரும் சல்மான், வாரயிறுதி எபிசோடில், தன்னை பற்றி முருகதாஸ் முன்வைத்த கடுமையான கருத்துக்களுக்கு பதிலளித்தார். "நான் இரவு 9:00 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன், அது பிரச்சினைகளை உருவாக்கியது" என்று அவர் கூறினார்.
சல்மான் கருத்துகள்
'என் விலா எலும்புகள் உடைந்தன': சல்மான் கான்
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான ரவி குப்தா, சல்மான் கான் நடித்ததற்காக வருந்துவதாக இருந்தால் எந்தப் படத்துக்கு என பெயரைச் சொல்லும்படி கேட்டார். சல்மான் கான் சூர்யவன்ஷி மற்றும் நிச்சாய் என்று குறிப்பிட்டு, "சமீபத்தில் எந்த படத்தையும் செய்ததற்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது சிக்கந்தராக இருக்கலாம் என்று மக்கள் சொல்கிறார்கள், ஆனால் நான் அதை நம்பவில்லை. படத்தின் கதை நன்றாக இருந்தது" என்று கூறியதுடன், கிண்டலாக," ஆனால் விஷயம் என்னவென்றால், நான் இரவு 9:00 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன், அது பிரச்சினைகளை உருவாக்கியது" என்றார். "என் தேர்வு தவறாகிவிட்டது, தயாரிப்பாளர் இதை எங்கள் இயக்குனர் (ஏ.ஆர். முருகதாஸ்) ஐயாவிடம் கூறினார்." என்றும் தெரிவித்தார்.
கிண்டல்
'மதராசி' படத்தின் வெற்றியை கிண்டலடித்த சல்மான்
சல்மான் கான் தொடர்ந்து, "ஆரம்பத்தில், படம் முருகதாஸ் மற்றும் சஜித் நதியாத்வாலாவுக்கு சொந்தமானது, ஆனால் பின்னர் சஜித் வெளியேறினார். பின்னர் முருகதாஸும் வெளியேறி தென்னிந்தியாவில் ஒரு படத்தை இயக்க சென்று விட்டார்" என்றார். தொடர்ந்து, சல்மான், முருகதாஸின் சமீபத்திய படமான மதராசியைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். "மதராஸி என பெயரிடப்பட்ட அந்த படம் சமீபத்தில் வெளியானது. பெரிய படம், சிக்கந்தரை விட பெரிய படம்.. பிளாக் பஸ்டர் படம் அது" என்றார்.
இயக்குனரின் கருத்துக்கள்
சல்மான் கானை பற்றி முருகதாஸ் என்ன சொன்னார்?
முன்னதாக, வலைபேச்சுவிற்கு அளித்த பேட்டியில், படத்தின் தோல்வியை விளக்கி முருகதாஸ், "ஒரு நட்சத்திரத்தை வைத்து படமெடுப்பது எளிதல்ல. பகல் காட்சிகளுக்கு கூட, இரவு 8:00 மணிக்கு படப்பிடிப்புக்கு வருவதால், இரவில் படமெடுக்க வேண்டியிருக்கிறது" என்றார். "ஒரு காட்சியில் நான்கு குழந்தைகள் இருந்தால், அதிகாலை 2:00 மணிக்கு அவர்களுடன் படமெடுக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் சோர்வடைந்து, வழக்கமாக தூங்கிவிடுவார்கள்." என்றார். நட்சத்திர நடிகர்கள் மற்றும் ₹200 கோடி பட்ஜெட் என்று கூறப்பட்ட போதிலும், சிக்கந்தர் பார்வையாளர்களை ஈர்க்கத் தவறிவிட்டது. ராஷ்மிகா மந்தனாவும் நடித்த இந்தப் படம் உலகளவில் ₹185 கோடியை மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. அதோடு இது கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.