
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சலார் டீசர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
'பாகுபலி' படத்திற்கு பிறகு, நடிகர் பிரபாஸிற்கு பெரிய வெற்றி ஏதும் அமையவில்லை. இருப்பினும், அவர் பான் இந்தியா படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் 'கே.ஜி.எப்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீலுடன் இணைந்து, 'சலார்' என்ற படத்தில் நடித்து வந்தார்.
அந்த படத்தை தயாரித்தது, கே.ஜி.எப், காந்தாரா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தான்.
இந்த 'சலார்' திரைப்படத்தில், மலையாள நடிகர் பிரித்விராஜ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் நாயகியாக ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.
பிரமாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், தற்போது, இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அதன்படி, சலார் திரைப்படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சலார் டீசர்
The reign of the most violent man begins! 🔥
— Hombale Films (@hombalefilms) July 6, 2023
▶️ https://t.co/KAGJyVxqga#SalaarCeaseFire #Salaar #SalaarTeaser #Prabhas #PrashanthNeel @PrithviOfficial @shrutihaasan @hombalefilms #VijayKiragandur @IamJagguBhai @sriyareddy @bhuvangowda84 @RaviBasrur @shivakumarart… pic.twitter.com/LUqwT5Bds4