இரண்டு நாளில் ரூ.295 கோடி: உலகளவில் வசூல் சாதனை படைக்கும் 'சலார்'
செய்தி முன்னோட்டம்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் பாகம் 1 திரைப்படம், வெளியான இரண்டு நாளில் உலகளவில் ரூ.295.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் படங்களின் வெற்றிக்கு பின்னர், ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல், சலார் திரைப்படத்திற்காக இணைந்தனர்.
கான்சார் நகரத்தின் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் போட்டியில், இரு உயிர் நண்பர்கள் எதிரியாவது படத்தின் கதை. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
படம் பேன் இந்தியா படமாக அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் வெளியானது. பிரித்விராஜ் அனைத்து மொழிகளிலும் அவரே டப்பிங் செய்துள்ளது இருப்பிடத்தக்கது.
2nd card
2023ல் முதல் நாளில் அதிக வசூல் செய்த சலார்
படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் நாளில் உலகளவில் ₹178.1 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இது, இந்த ஆண்டில் வெளியான எந்த ஒரு படமும், பெற்ற அதிகபட்ச முதல் நாள் வசூல் ஆகும்.
இந்நிலையில், இரண்டாம் நாள் வசூலில் படம் சற்று சறுக்கினாலும் உலகளவில், ₹117 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இரண்டு நாள் வசூலையும் சேர்த்து ரூ.295.7 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மற்றும் நாளை அரசு விடுமுறை என்பதால், சலார் திரைப்படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
embed
வசூல் குறித்து பிரிதிவிராஜ் ட்விட்
𝑻𝒉𝒆 𝑯𝒖𝒏𝒕𝒊𝒏𝒈 𝑺𝒆𝒂𝒔𝒐𝒏 𝑩𝒆𝒈𝒊𝒏𝒔...🔥💥#SalaarCeaseFire dominates the global-box office, crossing 𝟐𝟗𝟓.𝟕 𝐂𝐑𝐎𝐑𝐄𝐒 𝐆𝐁𝐎𝐂 (worldwide) 𝐢𝐧 𝟐 𝐃𝐚𝐲𝐬!#BlockbusterSalaar #RecordBreakingSalaar #SalaarRulingBoxOffice#Salaar #Prabhas #PrashanthNeel... pic.twitter.com/Djw6cux0rp— Prithviraj Sukumaran (@PrithviOfficial) December 24, 2023