கே.ஜி.எஃப் - சலார் படங்கள் மூலமாக புதிய சினிமாட்டிக் யூனிவெர்ஸை உருவாக்கும் பிரசாந்த் நீல்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் பிரசாந்த் நீல், கே.ஜி.எஃப் திரைப்படத்தை இரண்டு பாகமாக எடுத்து, இந்தியாவின் தேடப்படும் இயக்குனராக மாறியுள்ளார்.
அவர் தற்போது, 'சலார்' என்ற பான்-இந்தியா படத்தை எடுத்துவருகிறார்.
இத்திரைப்படத்தில், பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார்.
'அதிபுருஷ்' திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு, இந்த திரைப்படத்தை பிரபாஸ் மற்றும் அவரின் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், சலார் திரைப்படத்தின் டீசர், ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு, போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அது ஒரு சினிமாட்டிக் யூனிவெர்ஸின் வெளிப்பாடு என ரசிகர்கள் டீகோட் செய்து வருகிறார்கள். காரணம், கே.ஜி.எப்-2 கிளைமாக்ஸில், யஷ் செல்லும் கப்பல் மீது அதிகாலை 5 மணிக்கு தான் தாக்குதல் நடக்கும். எனவே சலார் அதன் தொடர்ச்சிதான் என யூகிக்கிறார்கள் ரசிகர்கள்.
ட்விட்டர் அஞ்சல்
பிரசாந்த் நீல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்
There is ongoing speculation that the #Salaar trailer is releasing around 5:12 AM, which is the time when "Rocky Bhai" in #KGF gets attacked & submerges into the water (at 5:25 AM). ⛴️ The interconnection between the Salaar & KGF universes is the talk of the town now😃💥 pic.twitter.com/Y3c0rD92Bf
— KARTHIK DP (@dp_karthik) July 3, 2023