சைஃப் அலி கானை தாக்கிய நபர், தாக்குதலுக்கு பின்னரும் வீட்டினுள் மறைந்திருந்தார்: திடுக்கிடும் தகவல்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை தாக்கிய நபர், அவரை கத்தியால் குத்திய பின், நடிகர் கட்டிடத்தின் தோட்டத்தில் 2 மணி நேரம் மறைந்திருந்து, போலீசாரை தவறாக வழிநடத்த முயன்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சைஃப் அலி கானைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர், ஜனவரி 16 அன்று ஒரு கொள்ளை முயற்சியின் போது நடிகரை தனது அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்திய பின்னர், அதே வளாகத்தில் இருந்த தோட்டத்தில் இரண்டு மணி நேரம் ஒளிந்திருந்தார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட குற்றவாளி, முதலில் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்று கூறி புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்த முயன்றார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குடியுரிமை
குற்றவாளி பங்களாதேஷ் குடியுரிமை பெற்றவர் என்பதை கண்டறிந்தது எப்படி?
காவல்துறையினர், குற்றவாளி பங்களாதேஷைச் சேர்ந்த என்பதை அவரது சகோதரரிடமிருந்து அவரது பள்ளி TC மற்றும் அவரது மொபைல் போன் மூலம் அதை கண்டறிந்தனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
அதோடு, ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமீன் ஃபகிர் என அடையாளம் காணப்பட்ட 30 வயதான குற்றம் சாட்டப்பட்டவரின் பங்களாதேஷ் குடியுரிமையை நிரூபிக்க இந்த சான்றிதழ் வலுவான ஆதாரமாக மாறியுள்ளது எனவும், அவர் தனது பெயரை பின்னர் விஜய் தாஸ் என்று மாற்றினார் என்பதும் கண்டறியப்பட்டது.
இந்த தாக்குதலில் சைஃப் அலி கான் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். அதன் பிறகு அவர் மருத்துவமனையில் ஐந்து மணிநேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அவர் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.