
மீண்டும் இணைகிறது ப்ரேமம் ஜோடி: நிவின் பாலியுடன் புதுப்படத்தில் இணையப்போகும் சாய் பல்லவி
செய்தி முன்னோட்டம்
ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட 'ப்ரேமம்' திரைப்படம், சாய் பல்லவியின் முதல் படமும் கூட.
அந்த படத்திற்கு பிறகு, மீண்டும் இந்த கூட்டணி 'தாரம்' என்ற புதிய படத்தில், 8 வருடங்கள் கழித்து மீண்டும் இணைய போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மலையாளத்தில், புதிதாக அறிவிக்கப்பட்ட படம் 'தாரம்'.
இதில்தான், சாய் பல்லவி இணைய போகிறார் என்ற பேச்சு நிலவி வருகிறது.
இந்த படத்தில், நிகிலா விமலும் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்ற 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கியது.
எனினும், சாய் பல்லவி இணைவது குறித்து எவ்வித அதிகார அறிவிப்பும் வெளியாகவில்லை.
நடிகை சாய்பல்லவியும், 'கார்கி' படத்திற்கு பிறகு எந்த படத்திலும் தற்போது வரை கமிட் ஆகவில்லை என்பது கூடுதல் செய்தி.
ட்விட்டர் அஞ்சல்
மீண்டும் வரப்போகும் ப்ரேமம் கூட்டணி?
மலரே நின்னை காணாதிருந்நால்… மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே… மீண்டும் இணையும் 'பிரேமம்' ஜோடி?#premam #malayalam #saipallavi #nivinpaulyhttps://t.co/eAdTDkCfxU
— Thanthi TV (@ThanthiTV) February 15, 2023