ராமாயணா படத்திற்காக சைவமாக மாறினேனா?சர்ச்சைகள் குறித்து மௌனம் கலைத்த சாய் பல்லவி
சமீபத்தில் 'அமரன்' படத்தில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்த சாய் பல்லவி, அடுத்தாக பாலிவுட்டில் நித்தேஷ் திவாரியின் பிரமாண்ட இயக்கத்தில் ராமாயணத்தில் நடிக்கிறார். இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா தேவியாக நடிக்கிறார் சாய் பல்லவி. இது பாலிவுட்டில் அவரது அறிமுகத்தை குறிக்கிறது. கதாபாத்திரத்திற்காக அவர் தயாரான விதம் குறித்த விவரங்கள் வெளியே கூறப்படாத நிலையில், படப்பிடிப்பின் போது அவர் அசைவ உணவைக் கைவிட்டதாக அறிக்கைகள் கூறின. இருப்பினும், சாய் பல்லவி இந்த கூற்றுகளுக்கு அதிருப்தி தெரிவித்தார். அதோடு, சமீபத்திய அறிக்கையில் இந்த பிரச்சினையை பதில் கூறியுள்ளார்.
'அடுத்த முறை இது போன்ற மோசமான வதந்தியை பார்த்தால்.. சட்டப்படி பதில் என்னிடம் இருந்து வரும்': பல்லவி
புதன்கிழமை, சாய் பல்லவி ஒரு நீண்ட குறிப்பு மூலம் இந்த வதந்திகளுக்கு பதில் கூறினார். அவர் X/Twitter இல் எழுதியதன்படி: "பெரும்பாலான சமயங்களில், எல்லா நேரங்களிலும், நான் ஆதாரமற்ற வதந்திகளைப் பார்க்கும் போதெல்லாம் அமைதியாக இருப்பதைத் தேர்வு செய்கிறேன்... ஆனால் நான் எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது; குறிப்பாக எனது படங்கள் வெளியாகும் நேரத்தில். " "அடுத்த முறை நான் எந்த ஒரு 'புகழ்பெற்ற' பக்கமோ அல்லது மீடியாவோ/தனிநபரும் ஆதாரமற்ற மோசமான கதையை பதிவிடுவதை பார்த்தல்... பிறகு நீங்கள் என்னிடமிருந்து சட்டப்பூர்வமான பதிலை கேட்பீர்கள்!" என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.