
சினிமாவில் இவர்கள் தான் சாய் பல்லவியின் ரோல் மாடல்கள்கலாம்!
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை, தன்னுடைய தனிப்பட்ட பணியில் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி.
அதிகப்படியான மேக்-அப்கள் இல்லை, கவர்ச்சி நடனம் இல்லை, குட்டை பாவாடை இல்லை, முத்த காட்சிகளோ, விரசமான காட்சிகளோ இல்லை. ஆனாலும் சாய் பல்லவியை கொண்டாடுகிறார்கள். அதற்கு, அவர் தேர்வு செய்யும் கதைகள், நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் மற்றும் அவரின் அதிரிபுதிரி நடனம்
தமிழில் சொற்ப படங்களே நடித்திருந்தாலும், 'ரவுடி பேபி' பாடலின் மூலம், பட்டி தொட்டி எல்லாம் அவர் முகம் பரிச்சயமானது.
தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சாய் பல்லவி, அவரின் நடனத்திற்கு, மாதுரி தீட்சித் மற்றும் ஐஸ்வர்யா ராய், இவர்கள் இருவரையும் தான் ரோல் மாடல்காலாக வைத்துள்ளாராம்.
சாய் பல்லவி
நடனத்தில் கலக்கும் சாய் பல்லவி
இதை, சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர் ஒரு பிரபல ஊடகத்தின் நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். அந்த செய்தி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் ஒளிபரப்பான நடன போட்டியின் மூலம் தான் சாய் பல்லவி, வெள்ளித்திரைக்கு பிரவேசித்தார்.
அவர் முதலில் 'தாம் தூம்' என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் தோன்றி இருந்தார். அதன் பின்னர் ப்ரேமம் என்ற மலையாள படம் தான் அவர் மீது புகழ் வெளிச்சம் படக்கரணமாக இருந்தது.
தமிழில் சாய் பல்லவி கடைசியாக நடித்த திரைப்படம் 'கார்கி'. அந்த படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை பேசும் படம் 'கார்கி'.
ட்விட்டர் அஞ்சல்
ஐஸ்வர்யா ராய் பாடலுக்கு நடனம் ஆடிய சாய் பல்லவி
@Sai_Pallavi92 vs #AishwaryaRai #SaiPallavi Indian Dancing QUEEN💃👸 pic.twitter.com/d6rq0b2RPE
— KingJdeep (@KingJdeep) October 16, 2021