
விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்; 20 ஆண்டுகளுக்கு முந்தைய சச்சின் படத்தின் ரீரிலீஸ் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான சச்சின் திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜான் இயக்கிய சச்சின் படத்தில் விஜயுடன் ஜெனிலியா, வடிவேலு, பிபாஷா பாசு, சந்தானம் மற்றும் ரகுவரன் ஆகியோர் நடித்தனர்.
காதல் கதையை மையமாக வைத்தது எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்.
அவரது இசையமைப்பும், படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும், தற்போதும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக உள்ளன.
20 ஆண்டுகள்
20 ஆண்டுகள் ஆன சச்சின்
விஜய்யின் சினிமா பயணத்தில் இந்தப் படம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. வடிவேலுவின் நகைச்சுவை மற்றும் திரைக்கதை பரவலான பாராட்டைப் பெற்றது.
தற்போது, இந்த திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 18, 2025 அன்று சச்சின் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும் என்பதை தாணு உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மறு வெளியீடு விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியுள்ளது, அவர்கள் படத்தை மீண்டும் பெரிய திரையில் காண ஆர்வமாக உள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பை விட்டு முழுநேர அரசியலுக்குள் நுழைய உள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்கு முந்தைய சச்சின் படத்தின் மறு வெளியீடு ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.