
புது ட்விஸ்ட்; உள்ளே என்ட்ரி கொடுத்த சச்சனா; மீண்டும் பிக் பாஸ் வீட்டில் 18 பேர்
செய்தி முன்னோட்டம்
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 18 போட்டியாளர்களுடன் கலகலப்புடன் தொடங்கியது.
நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில், இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக இணைந்தார்.
முதல் வாரம் கலகலப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 24 மணிநேரத்தில் போட்டியாளர்களில் ஒருவரான சச்சனா எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட்டார்.
இதனால் இதர போட்டியாளர்கள் அனைவரும் கதிகலங்கிய நிலையில், 17 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) வெளியிடப்பட்ட முதல் புரோமோவில் சச்சனா மீண்டும் உள்ளே நுழைந்துள்ளார். இதன் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளவர்களின் எண்ணிக்கை 18 பேர் ஆகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சச்சனா என்ட்ரி புரோமோ
#Day5 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 11, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/Q3TcD7mLTD
போட்டியாளர்கள்
குறைந்த மதிப்புள்ள போட்டியாளர்கள்
சச்சனா உள்ளே சென்றாலும், அவர் அங்கு நீடிப்பாரா என்பது தெரியாத நிலையில், புரோமோவில் அவர் கூறுகையில், பிக் பாஸ் வீட்டிற்குள் குறைந்த கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்களாக நடிகர் ரஞ்சித், சத்யா மற்றும் விஜே விஷால் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்கள் மூன்று பேரில் மிக மோசமாக இருப்பதாக தனக்கு தெரிவது யார் எனக் கூறும்போது கட் செய்து ரசிகர்களிடம் சுவாரஸ்யத்தை தூண்டியுள்ளார் பிக் பாஸ்.
இந்நிலையில், இரண்டாவதாக வெளியான புரோமோவில், உள்ளே யார் போலி, யார் உண்மையாக இருக்கிறார்கள் என ஹவுஸ்மேட்ஸ் தங்கள் மனதில் பட்டதை சொல்ல வேண்டும் என டாஸ் கொடுக்கப்படுகிறது.
அதற்கு ரவீந்திர் மற்றும் ரஞ்சித் அதிக போலி ஸ்டிக்கர் வாங்கியதுபோல் புரோமொவில் காட்டப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
யார் போலி? யார் உண்மையானவர்கள்? டாஸ்க்
#Day5 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 11, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/boz7wSwIix