Page Loader
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம்?
துருவ் விக்ரம் கடைசியாக 'மஹான்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2024
08:06 am

செய்தி முன்னோட்டம்

கடந்த மாதம் வரை, ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வலம் வந்த நிலையில், தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. பிரபல ஊடகமான வலைப்பேச்சில் வெளியான தகவலின்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு ஒப்பந்தமாகி இருப்பவர் துருவ் விக்ரம். துருவ் விக்ரம் கடைசியாக விக்ரமுடன் இணைந்து 'மஹான்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் பா. ரஞ்சித் தயாரிப்பில் நடித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய், லைகா நிறுவன தயாரிப்பில், இயக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வேறு எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகாமல் இருக்கிறது.

embed

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்

Exclusive Update !!#DhruvVikram to do the lead role in #JasonSanjay's Directorial Debut !!#Lyca pic.twitter.com/yRakVWwZ7z— Vignesh (@Vignesh58Viki) March 5, 2024