Loading...
விளம்பரத்துக்கே ₹375 கோடியா! ராமாயணா படக்குழுவின் பிரம்மாண்ட பிரமோஷன் பிளான்!
ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ராமாயணா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

விளம்பரத்துக்கே ₹375 கோடியா! ராமாயணா படக்குழுவின் பிரம்மாண்ட பிரமோஷன் பிளான்!

எழுதியவர் Vasuki
Jul 26, 2026
06:51 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் திரையுலகில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் கன்னட முன்னணி நடிகர் யாஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் ராமாயணா படத்தை உலகளாவிய திரைப்படமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க அதன் தயாரிப்பாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் கன்னட முன்னணி நடிகர் யஷ் கூட்டணியில் நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணா. இந்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக மட்டுமே சுமார் 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் சினிமா உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

இந்திய சினிமா

விளம்பரத்திற்கே ரூ.375 கோடி

இந்தியத் திரைத்துறை வரலாற்றிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இக்காப்பியத் திரைப்படத்தை சர்வதேச அளவில் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டு சேர்க்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹாலிவுட் திரைத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான சோனி பிக்சர்ஸ் இத்திரைப்படத்தின் சர்வதேச விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள நிலையில், சர்வதேச விளம்பரங்களுக்காக சோனி நிறுவனம் 235 கோடி ரூபாயும், இந்திய தயாரிப்பாளர்கள் 140 கோடி ரூபாயும் ஒதுக்கி, மொத்தம் 375 கோடி ரூபாய் அளவிற்கு விளம்பர வரவு செலவுத் திட்டத்தை நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது.

படக்குழுவின் நம்பிக்கை

உலக சாதனைக்கு திட்டம்

ஹாலிவுட்டின் அவதார் மற்றும் மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு இணையாக உலகளாவிய சந்தையில் இப்படத்தை விளம்பரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

விளம்பரப் பணிகளுக்கே இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவதால், படத்தின் மொத்த பட்ஜெட்டையும் வசூலையும் மீட்டெடுக்கத் திரையரங்கு வசூலில் புதிய உலக சாதனைகளைப் படைக்க வேண்டிய கட்டாயம் படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஆஸ்கர் நாயகன் ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணியில் உருவாகும் இசை, உலகத் தரத்திலான விஎஃப்எக்ஸ் காட்சிகள் ஆகியவை உலக சினிமா ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும், வசூலில் மாபெரும் லாபத்தை அள்ளலாம் என்றும் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

ADVERTISEMENT