RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
உலகெங்கும் வெற்றிகளை குவித்த வண்ணம் இருக்கிறது RRR திரைப்படம். அதன் தொடர்ச்சியாக, தற்போது 100 நாட்களை தாண்டியும் ஜப்பான் நாட்டிலுள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார், அப்படத்தின் இயக்குனர் S.S.ராஜமௌலி. "அந்த நாட்களில், ஒரு படம் 100 நாட்கள், 175 நாட்கள் ஓடுவது என்பது பெரிய விஷயம். காலப்போக்கில் வணிக அமைப்பு மாறியது... அந்த இனிய நினைவுகள் மறைந்துவிட்டன... ஆனால் ஜப்பானிய ரசிகர்கள் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்கள். லவ் யூ ஜப்பான்... அரிகடோ கோசைமாசு..." என்று கூறியுள்ளார். ரஜினியின் முத்து படத்தின் வசூலை மிஞ்சியுள்ள RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல், ஆஸ்கார் விருதுக்கு டாப் 10 பாடல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.