ஆஸ்கார் விருது இறுதி பட்டியலில் இணைந்த நாட்டு நாட்டு பாடல்!
95 வது விருது சீசனுக்கான முக்கிய பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மூலம் அறிவிக்கப்படவுள்ளது. இதில், இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு நான்கு படங்கள் இடம் பெற்றுள்ளது. அதில், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ், ஆல் தட் ப்ரீத்ஸ், செல்லோ ஷோ, ஆர்.ஆர்.ஆர். ஆர்ஆர்ஆர், தெலுங்கு படத்தில் இடம்பெற்ற, 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலாக ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா, பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை இணைந்து தயாரித்தன.
ஆஸ்கார் விருது பட்டியலில் இடம் பிடித்த நான்கு இந்திய படங்கள்; விருதை தூக்குமா நாட்டு நாட்டு பாடல்?
கடந்த மார்ச் 25-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், உலகம் முழுவதும் இப்படம் 1100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்தது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான கோல்டன் க்ளோப் விருதுக்காக ஆர்ஆர்ஆர் படம் இரண்டு பிரிவுகளின் நாமினேட் ஆகியது. தற்போது கீரவாணி இசையில் இசையில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாட்டு,சிறந்த 'ஒரிஜினல் சாங்' எனப்படும் பாடலுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.