Page Loader
'Iron Man' திரைப்பட நாயகன் ராபர்ட் டௌனி ஜூனியர் சாப்பிட்ட சுவிங்கம் ஏலம்!
'Iron Man' சாப்பிட்ட சுவிங்கம் விற்பனைக்கு!

'Iron Man' திரைப்பட நாயகன் ராபர்ட் டௌனி ஜூனியர் சாப்பிட்ட சுவிங்கம் ஏலம்!

எழுதியவர் Venkatalakshmi V
Mar 30, 2023
11:46 am

செய்தி முன்னோட்டம்

இணையத்தில் அவ்வப்போது பல வித்தியாசமான பொருட்கள் ஏலத்திற்கு வருவதுண்டு. சிலது, அரிதினும் அரிதான பொருட்களாக இருக்கும். சில நேரங்களில், பிரபல தலைவர்கள், நடிகர்கள் பயன்படுத்திய பொருட்களும் விற்பனைக்கு வருவதுண்டு. இவ்வகை பொருட்களை விற்பனை செய்வதற்கென, பிரத்யேக வலைத்தளங்களும் உள்ளன. சில நேரங்களில், இந்த வலைத்தளத்தில் விசித்திரமான பொருட்கள் ஏலத்தில் விடப்படும். அப்படி, தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ள ஒரு பொருள், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 'Iron Man' என்ற படத்தின் நாயகன், ராபர்ட் டௌனி ஜூனியர் சாப்பிட்ட சுவிங்கம், விற்பனைக்கு வந்துள்ளது. 'Hollywood Hall of Fame' அரங்கத்தில், அவர் தரையில் விளையாட்டாக ஒட்டிவைத்த சுவிங்கம், 30 லட்ச ரூபாய்க்கு, 'e-Bay' என்ற இணையத்தளத்தில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

'Iron Man ' திரைப்பட நாயகன் ராபர்ட் டௌனி ஜூனியர்