LOADING...
RK சுரேஷ் தயாரிக்கும் புதிய படத்திற்கு யுவன் மியூசிக் என அறிவிப்பு; இல்லை என மறுக்கும் YSR
தென் மாவட்டம் படத்துக்கு இசையமைக்கவில்லை என்று அறிவித்த யுவன்; ஆதாரத்தை காட்டி அதிரவிட்ட RK.சுரேஷ்

RK சுரேஷ் தயாரிக்கும் புதிய படத்திற்கு யுவன் மியூசிக் என அறிவிப்பு; இல்லை என மறுக்கும் YSR

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2024
03:14 pm

செய்தி முன்னோட்டம்

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பல அவதாரங்கள் எடுத்த R.K.சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில், தானே இயக்கி நடிக்கும், 'தென்மாவட்டம்' படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவை கமிட் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது பற்றிய அறிவிப்பையும் 'காடுவெட்டி' படவிழாவின் போது தெரிவித்திருந்தார் R.K.சுரேஷ். இதனையடுத்து, யுவன் தனது எக்ஸ் தளத்தில்,"தென் மாவட்டம் படத்துக்கு இசையமைப்பாளராக நான் கமிட் ஆகவில்லை. அதற்காக என்னை யாரும் அணுகவும் இல்லை" என குறிப்பிட்டார். உடனே, RK சுரேஷும் அதே எக்ஸ் தளத்தில்,"யுவன் சார், நீங்கள் ஒரு படம் மற்றும் இசை நிகழ்ச்சி நடத்தி தருவதாக கையெழுத்திட்டுள்ளீர்கள். ஒப்பந்தத்தை செக் செய்யவும். நன்றி" எனத்தெரிவித்து, அவர் முன்னர் பதிவிட்ட ஒரு டீவீட்டையும் ரீட்வீட் செய்து ஆதாரத்தை வழங்கியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

யுவன் மியூசிக்?

ட்விட்டர் அஞ்சல்

RKசுரேஷ் பதில்

ட்விட்டர் அஞ்சல்

RKசுரேஷ் பதில்