
RJ விக்னேஷ்காந்துக்கு ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் சம்மன்
செய்தி முன்னோட்டம்
நடிகரும், RJ-வுமான விக்னேஷ்காந்த், பிளாக் ஷீப் என்ற பெயர்கொண்ட தொலைக்காட்சி மற்றும் யூடூப் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, தேவையான கேமரா, லைட்டுகள் போன்ற முக்கிய உபகரணங்களை வாங்கும் போது, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக, ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகத்திற்கு புகார் வந்தது.
அதை தொடர்ந்து, கோடம்பாக்கத்தில் உள்ள பிளாக் ஷீப் நிறுவனத்தில், ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாகவும், வரி ஏய்ப்பு நிகழ்ந்தததிற்கான ஆதாரங்களும் பல சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, RJ விக்னேஷ்காந்திற்கு, ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகத்தில் நேரில் ஆஜராகி, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
RJ விக்னேஷ்காந்துக்கு சம்மன்
Oh god beautiful!@BlackSheepTamil #Vigneshkanth #GST #TAX pic.twitter.com/XQREhLhgNG
— Inbox Tamil (@nagasathish2) February 14, 2023