Page Loader
நடிகர் ஸ்ரீயின் பரிதாபமான நிலைக்கு சரியான சம்பளம் கிடைக்காதது தான் காரணமா?
அவரது பதிவுகள் அவரது மோசமான மனநிலையில் இருப்பதை உணர்த்துகிறது

நடிகர் ஸ்ரீயின் பரிதாபமான நிலைக்கு சரியான சம்பளம் கிடைக்காதது தான் காரணமா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 14, 2025
04:14 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாக, சமூக ஊடகங்களில் ஸ்ரீ என்ற ஸ்ரீராம் நடராஜனின் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரது பதிவுகள் அவரது மோசமான மனநிலையில் இருப்பதை உணர்த்துகிறது. எனினும் இது படத்திற்காக ஏற்பட்ட மாற்றம் என ஒரு சிலர் கருதினாலும், அவர் டிப்ரெஷனில் இருப்பதாகவும், வாய்ப்பு இல்லாததால் அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் சிலர் கருதினர். அவரைப் பற்றி ஊகங்கள் பரவிய நிலையில், திரைத்துறையில் சரியான சம்பளம் கிடைக்காததால் அவர் போராடி வருவதாக இப்போது கூறப்படுகிறது. ஸ்ரீ குறித்து பிரபல ரெவ்யூவர் பிரசாந்த் ரங்கசாமி,"குடும்பத்திலிருந்து பிரிந்து ஒரு வருடத்திற்கும் மேலாக தனியாக வசித்து வருகிறார். அவரது நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முடிந்தது, விரைவில் அவருக்கு உதவி கிடைக்கும்" என பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

உதவி

தயாரிப்பாளர் பிரபு அவரை தொடர்பு கொள்ள முயல்வதாக பதிவு

இதற்கிடையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, X இல் ஒரு பதிவில், அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகக் கூறினார். "ஸ்ரீயின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளோம். அவரது குடும்பத்தினர் மற்றும் நாங்கள் உட்பட நண்பர்கள் நீண்ட காலமாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். அதைச் சுற்றி இவ்வளவு ஊகங்கள் உருவாகி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ஸ்ரீயை அணுகி அவரை நல்ல ஆரோக்கியத்திற்குக் கொண்டுவருவதே முதல் முன்னுரிமையாக இருக்கும். அதை அடைய யாராவது எங்களுக்கு உதவ முடிந்தால் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்!" என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தொழில்

சின்னத்திரையிலிருந்து பயணத்தை தொடங்கிய ஸ்ரீ

ஸ்ரீ தனது பயணத்தை விஜய் தொலைக்காட்சித் தொடரான ​​'கனா காணும் காலங்கள்' மூலம் தொடங்கினார். பின்னர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 (2012) இல் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். அவரது யதார்த்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது மற்றும் படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது. அவரது அடுத்த பெரிய படம் லோகேஷ் கனகராஜின் அறிமுக படமான மாநகரம் (2017). பின்னர் அவர் பிக் பாஸ் தமிழ் 1 இல் தோன்றினார். இருப்பினும், நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் நிகழ்ச்சியை விட்டு தானாகவே வெளியேறினார். இதுதவிர அவர் ஓநாயும் ஆடுகுட்டியும், சோன் பப்டி, வில் அம்பு மற்றும் இறுகப்பற்று போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.