Page Loader
அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்துவிட்டார் லெஜண்ட் சரவணன் 
அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்துவிட்டார் லெஜண்ட் சரவணன்

அடுத்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்துவிட்டார் லெஜண்ட் சரவணன் 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2023
02:24 pm

செய்தி முன்னோட்டம்

'தி லெஜண்ட்' படத்தின் மூலம், கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். முதல் படத்திற்காக JD-ஜெர்ரி இயக்குனர் இணையுடன் இணைந்த சரவணன், அதன் பிறகு அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடாமலேயே இருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஆயுத பூஜை விழாவின் போது, அடுத்த படத்திற்கு தான் தயாராகிவிட்டதாக ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தற்போது, அவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவரின் இரண்டாவது படத்தினை துரை செந்தில் குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தனுஷின் கொடி, பட்டாஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கிவர். தற்போது அவர் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

embed

Twitter Post

#LegendSaravanan's next movie will be directed by Durai Sethilkumar (Ethir Neechal, Kodi)😯🔥 Seems like a good director choice 👌 pic.twitter.com/Rv8YI5DwM1— AmuthaBharathi (@CinemaWithAB) December 21, 2023