Page Loader
சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கப்போகும் நடிகர் விஜய்? வைரலாக பரவும் தகவல் 
2026 சட்டமன்ற தேர்தல் வரை விஜய் சினிமாவில் இருந்து இடைவெளி எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது

சினிமாவிலிருந்து பிரேக் எடுக்கப்போகும் நடிகர் விஜய்? வைரலாக பரவும் தகவல் 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2023
01:19 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய், சினிமாவிலிருந்து 3 ஆண்டுகள் பிரேக் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைக்கேட்டு அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய், தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த வாரத்துடன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும், அதன்பின்னர் காஷ்மீரில் ஒரு வாரத்திற்கு பேட்ச் ஒர்க் ஷாட்ஸ் மட்டுமே எடுப்பார்கள் எனவும், அதன் பின்னர், படத்தின் VFX வேலைகள் நடைபெறும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் முடிவடைந்து, வரும் அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும். இதனிடையே, 'லியோ' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததும், வெங்கட் பிரபுவுடன் இணையும் 'தளபதி 68' படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.

card 2

அரசியலில் ஆழம்பார்க்க தயாராகிறாரா விஜய்?

வெங்கட் பிரபு இயக்கப்போகும் படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், வேறு எந்த படத்திற்கு விஜய் சம்மதித்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்தில், பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை சந்தித்து விருது வழங்கிய விழாவில் கிடைத்த வரவேற்பை முன்னோட்டமாக எதுத்துக்கொண்டு, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் காலம் இறங்குவது குறித்தும் விஜய் யோசித்து வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யவே இந்த 3 வருட இடைவெளி எனவும் ஊடகங்கள் யூகிக்கின்றன. விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில், சென்ற சட்டமன்ற தேர்தலின் போது, அவரின் தந்தை SA சந்திரசேகர், விஜய்யின் பெயரில் ஒரு அரசியல் கட்சியை துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.