LOADING...
காவ்யா மாறன் உடன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணமா? இணையத்தில் வைரல் செய்தி
கடந்த மார்ச் 2025இல் தான் முதலில் இந்த ஜோடி ஒருவரையொருவர் காதலிப்பதாக தகவல்கள் வந்தன

காவ்யா மாறன் உடன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணமா? இணையத்தில் வைரல் செய்தி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2025
02:46 pm

செய்தி முன்னோட்டம்

இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் SRH தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் டேட்டிங் சலசலப்பு நீண்ட நாட்களாக உலவி வருகிறது. கடந்த மார்ச் 2025 இல் தான் முதலில் இந்த ஜோடி ஒருவரையொருவர் காதலிப்பதாக தகவல்கள் வந்தன. பின்னர், அனிருத் பக்கத்தில் அந்தக் கூற்றுகளை மறுத்து, இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் அவர்கள் டேட்டிங் செய்யவில்லை என்றும் வெளிப்படுத்தியது. இப்போது, ​​இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பாலிவுட்ஷாதிஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியறிக்கையின்படி, அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமண ஊகங்கள் Reddit -இல் தொடங்கியது. விவாத தளமான ரெடிட்டில் இந்த பதிவு வைரலாகியுள்ளது.

யூகங்கள்

பொது இடங்களில் சேர்ந்து காணப்பட்டதால் கிளம்பிய யூகங்கள்

இதற்கு எந்த உறுதிப்படுத்தலும் இல்லை என்றாலும், நெட்டிசன்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஜோடி அடிக்கடி உணவகங்களில் காணப்பட்டதால், இந்த சலசலப்பு உண்மையாக இருக்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். Reddit பதிவிற்கு பதிலளித்த ஒரு பயனர் லாஸ் வேகாஸ் பயணத்தின் போது அவர்களை ஜோடியாக பார்த்தாகவும் கூறினார். இன்னொரு பயனாரோ ஒரு படி மேலே போய், அனிருத் ரவிச்சந்தர் ஒரு தொலைத்தொடர்பு ஒளிபரப்புத் துறையை சேர்ந்த மிகவும் படித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்று ஒரு டாரட் கணிப்பை, அனிருத் நேர்காணலில் கண்டதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும், இது குறித்து அனிருத் மற்றும் காவ்யா தரப்பில் இருந்து எந்த உறுதிப்படுத்தலும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.