Page Loader
இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு
ஷங்கர்-ராம்சரண் படத்தின் பெயர் வெளியீடு

இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 27, 2023
08:46 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகரும், RRR படத்தின் ஹீரோவுமான ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என அறிந்திருப்பீர்கள். அந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. முதலில் RC15 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்தின் டைட்டில் 'கேம் சேன்ஜர்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ராம்சரணின் பிறந்த நாள். ஆகையால், படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, அதை கொண்டாடும் விதமாக தலைப்பை அறிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்றும் வெளியாகப்போகிறது எனவும் அறிவித்துள்ளனர். இந்த படத்தில், ஹிந்தி பட நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

RC 15 டைட்டில் வெளியீடு