
சத்தமின்றி OTTயில் வெளியானது விஷாலின் ரத்னம் திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் சென்ற மாத இறுதியில் வெளியானது 'ரத்னம்' திரைப்படம்.
இந்த திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் முடியும் முன்னரே தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி விஷாலின் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை தந்துள்ளது.
பொதுவாக எந்த திரைப்படமும், திரையரங்குகளில் வெளியாகி 45 நாட்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்த நிலையில், படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு முன்னரே OTTக்கு பேக் அப் செய்யப்பட்டுள்ளது இந்த 'ரத்னம்'.
ரத்னம் திரைப்படம், இன்று (மே 23) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
embed
ரத்னம் திரைப்படம்
#rathnam now streaming on #primevideo#vishal #priyabhavanishankar #hari pic.twitter.com/vKn9FVtwIM— Tamil Film Update (@tweettamilfilm) May 23, 2024