விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட போகும் விஜய் தேவாரகொண்டா-ரஷ்மிகா ஜோடி
செய்தி முன்னோட்டம்
நடிகை ரஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், அதற்கு முன்னதாக வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.
தெலுங்கு திரைப்படமான 'கீதா கோவிந்தம்' என்ற சூப்பர்ஹிட் படத்தில் இணைந்து நடித்ததன் மூலமாக நட்பான விஜய் தேவாரகொண்டா-ரஷ்மிகா ஜோடி, சிறிது காலத்தில் காதலில் விழுந்ததாக ஊடக செய்திகள் தெரிவித்தன.
அதற்கேற்றாற்போல, அவர்களுக்கிடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
எனினும் அவர்கள் காதல் கிசுகிசுக்களை மறுத்து வந்தனர். தாங்கள் இருவரும் வெறும் நண்பர்களே என கூறி வந்தனர்.
இருப்பினும், இருவரும் ஒரே ஊருக்கு சுற்றுலா சென்றது போன்ற புகைப்படங்கள் வெளியான வண்ணம் இருந்தது.
card 2
பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம்?
இதற்கிடையே, ரஷ்மிகா ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.
மறுபுறம் விஜய் தேவரகொண்டாவும் தன்னுடைய திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.
எனினும் காதல் கிசுகிசு மட்டும் ஓய்ந்தபாடில்லை. இந்த சூழலில் தான், தற்போது இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகின்றனர் என ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கு முன்னதாக பிப்ரவரி மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெறும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வரும் பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று இவர்களின் காதல்- திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
எனினும், இந்த வைரல் செய்தி குறித்து இருவருமே மௌனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது