திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த 'துரந்தர்' திரைப்படம் ஜனவரி 30 முதல் Netflix-ல்!
செய்தி முன்னோட்டம்
கடந்த டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி, கடந்த ஏழு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம், டிஜிட்டல் தளத்தில் தடம் பதிக்க உள்ளது. வட இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், வரும் ஜனவரி 30-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் இந்திய திரைத்துறையில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ரன்வீர் சிங்கின் திரைப்பயணத்திலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட டிஜிட்டல் ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது.
OTT
துரந்தர் OTT விவரங்கள் மற்றும் வசூல் விவரங்கள்
'துரந்தர்' முதல் பாகம் மற்றும் 2026-இல் வெளியாகவுள்ள இதன் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டின் ஓடிடி உரிமைகளையும் சேர்த்து, சுமார் 130 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ரன்வீர் சிங்கின் அதிரடி நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்காக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆதித்யா தார் இயக்கிய இந்தப் படம் இதுவரை இந்தியாவில் ரூ.826.41 நிகர வசூல் செய்துள்ளது, அதே நேரத்தில் அதன் உலகளாவிய வசூல் ரூ.1283.5 மொத்த வசூலைத் தாண்டியுள்ளது. படத்தின் வெற்றி மற்றும் அதிகரித்து வரும் எதிர்பார்ப்பு காரணமாக, இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் பாகம், மார்ச் 19 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.