LOADING...
ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' மிரட்டல் டீசர் ரிலீஸ்; மார்ச் 19-ல் திரையரங்குகளில் வேட்டை
துரந்தர் இரண்டாம் பாகத்திற்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது

ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' மிரட்டல் டீசர் ரிலீஸ்; மார்ச் 19-ல் திரையரங்குகளில் வேட்டை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 03, 2026
12:55 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர்' படத்தின் முதல் பாகம் கடந்த 2025 டிசம்பரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது ஓடிடியிலும் முதலிடம் பிடித்துள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள டீசர், முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் இருந்து தொடங்குகிறது. லயாரியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'ஹம்சா அலி மசாரி'யாக ரன்வீர் சிங் செம ஸ்டைலாகவும், ஆக்ரோஷமாகவும் காட்சியளிக்கிறார். டீசரின் இறுதியில் ரன்வீர் பேசும், "இது புதிய இந்தியா, வீட்டுக்குள் புகுந்து அடிப்போம்"என்ற வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பின்னணி

படத்தின் பின்னணி

உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரன்வீர் சிங் ஒரு இந்திய உளவாளியாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, அங்குள்ள குற்றப்பின்னணியை அழிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன் மற்றும் அக்ஷய் கண்ணா எனப் பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்தில் ஹம்சாவின் பழிவாங்கல் படலமும், 'படே சாஹப்' (Bade Sahab) என்ற மர்மமான கதாபாத்திரத்தின் உண்மையான முகமும் வெளிப்படும் எனத் தெரிகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் ௧௯ அன்று 'துரந்தர் 2' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போலன்றி, இரண்டாம் பாகம் பல மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement