ராம்சரண்- ஷங்கரின் கேம் சேஞ்சர் ட்ரைலர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
ராம் சரண் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
SJ.சூர்யா வில்லனாக நடிக்கும் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடிக்கிறார்.
IPS அதிகாரியாகவும், IAS அதிகாரியாகவும் சமூக மாற்றத்திற்காக போராடும் வேடத்தில் அவர் நடிப்பதை ட்ரைலர் வெளிப்படுத்துகிறது.
தமன் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டதால், படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.
ஷங்கரின் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 தோல்வியை தழுவியதால், இப்படத்தின் மூலம் அவர் மீண்டும் தன்னுடைய வெற்றியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
మా పార్టీ సేవ చేయడానికే కానీ సంపాదించడానికి కాదు!! ✊🏼💥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 2, 2025
You are in for the biggest game that you have ever seen!🔥
Presenting the #GameChangerTrailer ❤️🔥
▶️https://t.co/Sy1N0nxVt5#GameChanger #GameChangerOnJAN10 🚁
Global Star @AlwaysRamCharan @shankarshanmugh @advani_kiara… pic.twitter.com/dFMhSZYmHS