NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகை ரகுல் ப்ரீத்தின் சகோதரர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகை ரகுல் ப்ரீத்தின் சகோதரர் கைது
    அமன் ப்ரீத் சிங் நேற்று கைது செய்யப்பட்டார்

    நைஜீரியர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகை ரகுல் ப்ரீத்தின் சகோதரர் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 16, 2024
    09:11 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரும், நடிகருமான அமன் ப்ரீத் சிங், போதை பொருட்களை வாங்கியதாக நேற்று, திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

    ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சைபராபாத் காவல்துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட ராஜேந்திர நகர் எஸ்ஓடி காவல் துறையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கைது செய்யப்பட்ட போது, ​​200 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நடவடிக்கையின் மூலம் திரைப்பட நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஐந்து நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கைதுகள்

    அமன் ₹2.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்தார்: அறிக்கை

    இந்த நடவடிக்கையில் அமன் சிங்கைத் தவிர, நான்கு பிரபலங்கள் மற்றும் இரண்டு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இருப்பினும், அவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

    அமன் சிங் உட்பட அவரின் குடும்பத்தினர் சிலரும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

    அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அமன் சிங்கின் பணியிடம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அவர் அடிக்கடி செல்லும் மற்ற இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    ரகுலின் சகோதரர் அமன், 2.6 கோடி ரூபாய் (3,50,000 டாலர்) மதிப்பிலான போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

    விசாரணை

    விசாரணை நடைபெற்று, சம்மந்தப்பட்டவர்கள் பெயர்கள் கமிஷனரிடம் சமர்ப்பிக்கப்பட்டது

    தோராயமாக 30 வாடிக்கையாளர்கள், முதன்மையாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், அமன் சிங்கிடம் இருந்து கோகோயின் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த பெயர் பட்டியல் சைபராபாத் கமிஷனரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

    கைது செய்யப்பட்ட விற்பனையாளர்கள் கோவா, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஹைதராபாத்தில் பரவி வரும் போதைப்பொருள் பிரச்சனைக்கு பதிலளிக்கும் விதமாக, போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை மாநில காவல்துறை அதிகரித்துள்ளது.

    ரகுல் ப்ரீத் சிங்

    போதைப்பொருள் வழக்கில் சமன் செய்யப்பட்ட ரகுல்

    ஏற்கனவே டோலிவுட் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ரகுலுக்கு மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குநரகம் (ED) முன்பு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாலிவுட்டில் நிலவும் போதைப்பொருள் கலாச்சாரத்தை அம்பலப்படுத்திய மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து, ரகுலுக்கும் மும்பையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

    இவரோடு ராஜ்புத் வழக்கில் முக்கிய சந்தேக நபரும், ரகுலுடன் நெருங்கிய நண்பர்களாக அறியப்பட்டவருமான ரியா சக்ரவர்த்தியும் விசாரணையை எதிர்கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போதைப்பொருள்
    கைது
    ரகுல் ப்ரீத் சிங்
    ஹைதராபாத்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் காவல்துறை
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்

    கைது

    அங்கித் திவாரி கைது எதிரொலி-லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு  திண்டுக்கல்
    பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது  மும்பை
    சேலம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது - காவல்துறை அதிரடி  சேலம்
    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை தமிழக காவல்துறை

    ரகுல் ப்ரீத் சிங்

    சினிமா கனவு கைகூடவில்லையெனில் இதை தான் செய்திருப்பேன்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்!  நடிகைகள்
    2024 பொங்கலுக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம்  சிவகார்த்திகேயன்

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025