லால் சலாம் படத்தின் ரஜினிகாந்த் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'லால் சலாம்'.
இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திர போஸ்டர் நேற்று நள்ளிரவு இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.
இப்படத்தில் மொய்தீன் பாய் என்னும் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.
ரஜினியின் இந்த போஸ்டர் வெளியான நிலையில், இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு இந்த கெட்-அப் செட்டாகவில்லை என்று கூறி வருகிறார்கள்.
மேலும் சிலர் இந்த போஸ்டருக்கு மீம்ஸ் போட்டு கலாய்த்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Moideen Bhai - what a look !!
— Prashanth Rangaswamy (@itisprashanth) May 7, 2023
Thalaivar rocks ! #Lalsalaam pic.twitter.com/t7dmo6UhhP