எந்திரன் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவு: படப்பிடிப்புத் தள நினைவுகளைப் பகிர்ந்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலு
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2010 அக்டோபரில் வெளியான இத்திரைப்படத்தின் 16-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு படப்பிடிப்புத் தளத்தின் அரிய புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 16 ஆண்டுகள் கடந்தும் அந்த ஃபிரேம்கள் மேஜிக்கை சுமந்து நிற்கின்றன. இது நினைவுகளின் காலப் பெட்டகம் எனக் குறிப்பிட்டு, ரஜினி, ஷங்கர் மற்றும் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசை, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவற்றுடன் உருவான எந்திரன், இந்திய சினிமாவின் தொழில்நுட்ப மற்றும் வசூல் ரீதியான பிரம்மாண்ட மைல்கல்லாக அமைந்தது.
ரத்னவேலு நெகிழ்ச்சி
நினைவுகளின் காலப் பெட்டகம்
படப்பிடிப்புத் தள நினைவுகள் குறித்துப் பதிவிட்டுள்ள ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, எந்திரன் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.ஆனால் அந்த ஃபிரேம்கள் இப்போதும் அதே மேஜிக்கை சுமந்து நிற்கின்றன.
எந்திரனின் படப்பிடிப்பு நினைவுகளைத் திரும்பிப் பார்ப்பது ஒரு டைம் கேப்சூலை திறப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
மனிதர்கள், ஆர்வம், சவால்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்த ஒரு அசாதாரண பயணம் அது என்று குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது நம்பிக்கை வைத்து இந்த பிரம்மாண்ட வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஷங்கருக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகை ஐஸ்வர்யா ராய், கலை இயக்குநர் சாபு சிரில், விசுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஸ் மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா
பிரம்மாண்ட அறிவியல் மைல்கல்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான எந்திரன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் விஞ்ஞானி வசீகரன் மற்றும் சிட்டி ரோபோ என இரட்டை வேடங்களில் நடித்து உலகளாவிய கவனத்தைப் பெற்றார்.
ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க, மறைந்த நடிகர் டேனி டென்சாங்பா, சந்தானம், கருணாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றும் அதிநவீன ஹாலிவுட் தரத்திலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் வெளியான இப்படம், இந்திய சினிமா வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.