LOADING...
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் - உலக நாயகன் காம்போ! உறுதி செய்தார் நடிகர் கமல்
மீண்டும் சூப்பர் ஸ்டார்-உலக நாயகன் காம்போவை உறுதி செய்தார் நடிகர் கமல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் - உலக நாயகன் காம்போ! உறுதி செய்தார் நடிகர் கமல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2025
08:03 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவிருப்பதை, நடிகர் கமல்ஹாசன் சைமா விருதுகள் 2025 விழாவில் உறுதிப்படுத்தியுள்ளார். 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணையும் இந்த நட்சத்திரக் கூட்டணி குறித்த செய்தி, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் கமல்ஹாசன் இதற்குப் பதிலளித்தார்.

நகைச்சுவை

நகைச்சுவையாகக் குறிப்பிட்ட நடிகர் கமல்

"நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க நீண்ட நாட்களாகிவிட்டது. ஒரு பிஸ்கட்டை உடைத்து எங்களுக்கு இருவரும் பகிர்ந்து கொடுத்தார்கள். அதை நாங்கள் வாங்கிச் சாப்பிட்டோம். இப்போது மீண்டும் அரை பிஸ்கட் போதும் என்று நினைக்கிறோம். அதனால்தான் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறோம்" என்று கமல் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ரசிகர்களிடையே நிலவிய போட்டி உணர்வு குறித்த கேள்விக்கு, "போட்டி என்பது நீங்கள் ஏற்படுத்தியதுதான். எங்களுக்குள் அது பெரிய விஷயம் இல்லை" என்றும் அவர் பதிலளித்தார். "நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பது தொழில் ரீதியாக ஒரு பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு இது இப்போதாவது நடக்கிறதே என்ற மகிழ்ச்சியைத் தருகிறது" என்று கமல் கூறினார்.

தயாரிப்பு

இருவரும் இணைந்து தயாரிக்க கமல் விருப்பம்

மேலும், "எங்கள் இருவரது படங்களை நாங்களே தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்தது. இப்போதாவது அது நடக்கட்டும்" என்று அவர் தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சமீபத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிப்பதாக இருந்தால், மற்ற அனைத்தையும் நிறுத்திவிட்டு அதில் கவனம் செலுத்துவேன் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post