27 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் மீண்டும் இணையும் ராதிகா சரத்குமார்: டேர் டெவில் படப்பிடிப்பில் இணைந்தார்
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் 'டேர் டெவில்' (Dare Devil) திரைப்படத்தில், மூத்த நடிகை ராதிகா சரத்குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான பவித்ரா படத்தில் அஜித்தின் தாயாகவும், 1999-ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்திலும் இணைந்து நடித்திருந்த ராதிகா, சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் திரையைப் பகிர்ந்து கொள்ள உள்ளார். கதையை எழுதும்போதே இந்தப் பாத்திரத்தில் ராதிகா சரத்குமார் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதியாக இருந்ததாகப் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படக்குழு உற்சாக வரவேற்பு
தேதிகளை மாற்றியமைத்து படப்பிடிப்பில் இணைந்த ராதிகா
படக்குழுவினர் ராதிகா சரத்குமாரை அணுகியபோது அவருக்குப் பல்வேறு படப்பிடிப்புப் பணிகள் இருந்தபோதிலும், அஜித்துடன் நடிக்கும் இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதற்காகத் தனது தேதிகளை மாற்றியமைத்து கடந்த வாரம் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
அஜித் மற்றும் ராதிகா இடையே பரஸ்பரம் மிகுந்த மரியாதை உள்ள நிலையில், முன்னதாக லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பந்தய மைதானத்தில் (Silverstone Circuit) அஜித்தின் கார் பந்தயத்திற்கு முன்பாகவும் ராதிகா அவரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'டேர் டெவில்' படப்பிடிப்புத் தளத்தில் இணைந்த முதல் நாளிலேயே படக்குழுவினர் அனைவரும் ராதிகாவுக்கு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்துள்ளனர்.