Page Loader
அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீஸர் வெளியானது
புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் அல்லு அர்ஜுனும், இயக்குனர் சுகுமாரும்

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீஸர் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2024
11:20 am

செய்தி முன்னோட்டம்

ரசிகர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த புஷ்பா 2 திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டீஸர் வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அந்த வகையில், இன்று காலை இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 : தி ரூல் டீசரில் ஒரு கோவில் திருவிழாவில் அம்மன் வேடம் தரித்து, புஷ்பா (அல்லு அர்ஜுன்) எதிரிகளை ஏறி மிதிப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்திலும் ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, ஃபஹத் ஃபாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சுகுமார் இயக்கயுள்ள இந்த திரைப்படத்திற்கு, தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

embed

புஷ்பா 2 டீஸர்

I thank each and everyone of you for the birthday wishes! My heart is full of gratitude. Please take this teaser as my way of saying thank you! https://t.co/fZQDGYNlWb#Pushpa2TheRule— Allu Arjun (@alluarjun) April 8, 2024