'புஷ்பா 2' புதிய போஸ்டர் வெளியீடு; நாளை காலை டீஸர் வெளியாகும் என அறிவிப்பு
புஷ்பா 2 டீசர் நாளை திங்கட்கிழமை காலை 11:07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கிடக்க, அதன் கிலிம்ப்ஸ் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனும் தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் . அவரது இடுகை தற்போது வைரலாகி வருகிறது. புஷ்பா 2 படத்தின் டீஸர் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்படவுள்ளது. முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர் ரஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை ஒட்டி ஒரு புதிய போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சுகுமார் இயக்கயுள்ள இந்த திரைப்படம், தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
நாளை காலை டீஸர் வெளியீடு
𝐓𝐎𝐌𝐎𝐑𝐑𝐎𝐖 is the day ❤️🔥 𝟏𝟏.𝟎𝟕 𝐀𝐌 is the time ❤️🔥#Pushpa2TheRuleTeaser will mark the entry of #PushpaRaj that will create ripples across the box office💥💥 𝗚𝗢𝗢𝗦𝗘𝗕𝗨𝗠𝗣𝗦 𝗚𝗨𝗔𝗥𝗔𝗡𝗧𝗘𝗘𝗗 🔥#PushpaMassJaathara #Pushpa2TheRule pic.twitter.com/kMTYEgx8GB— Pushpa (@PushpaMovie) April 7, 2024