புஷ்பா 2 படம் எப்படி இருக்கு? அல்லு அர்ஜுனின் நடிப்பை பாராட்டும் ரசிகர்கள்
புஷ்பா 2: தி ரூல், அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆரம்பகட்ட விமர்சனங்களின்படி, இயக்குனர் சுகுமார் "எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்களுடன் நிரம்பிய கதையுடன் கூடிய ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கியுள்ளதாக கூறியுள்ளனர். புதன்கிழமை மாலை ஹைதராபாத்தில் நடந்த புஷ்பா 2 பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் படம் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் இதை "மெகா பிளாக்பஸ்டர்" என்று அழைத்தார் மற்றும் படத்தில் அல்லு அர்ஜுன் "அருமையானவர்" என்று கூறியுள்ளார். புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ஃபஹத் ஃபாசில், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.