
எஸ்.ஜே.சூர்யாவின் 'கில்லர்' படத்திற்கு ஜெர்மனியில் இருந்து இறக்குமதியான பிரமாண்ட சொகுசு கார்
செய்தி முன்னோட்டம்
நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, 'கில்லர்' படத்தின் மூலம் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்பியுள்ளார். 2015-ல் வெளியான 'இசை' படத்துக்கு பிறகு, அவர் இயக்குனராகவும், ஹீரோவாகவும் நடிக்கும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்தில் ஒரு காருக்கு முக்கியமான பங்கு உள்ளதால், ஜெர்மனியில் இருந்து புதிய BMW கார் ஒன்றை படப்பிடிப்புக்காக நேரடியாக இறக்குமதி செய்துள்ளனர் என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. காரை சுற்றி கதை நகர்வதாக கூறப்படுகிறது. இதனால் காட்சிகளுக்கு ஒரு அழகு மற்றும் வித்தியாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவரங்கள்
SJS பிறந்த நாளில் வெளியான சிறப்பு போஸ்டர்
'கில்லர்' படத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு AR ரஹ்மான் இசையமைக்கிறார் SJ சூர்யாவின் ஏஞ்சல் ஸ்டூடியோஸ் மற்றும் கோகுலம் மூவீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகிறது. முன்னதாக தனது பிறந்த நாளை முன்னிட்டு, 'கில்லர்' படத்தின் முதல் லுக் போஸ்டரை எஸ்.ஜே.சூர்யா ரசிகர்களுக்கு வெளியிட்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மறுபுறம் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் மற்ற திரைப்படங்களில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', 'சர்தார் 2'ஆகியவையும் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டன. அதனால், 'கில்லர்' பட வேலைகளில் SJ சூர்யா தீவிர கவனம் செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.