சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை
கோலிவுட்டின் பிரபல நடிகர்கள் ஐவர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (ஜூன் 18 .,)சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்ககூட்டத்தில் தமிழ் சினிமாவின் 400 தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். இதில், கால்ஷீட் பிரச்சினைகளை பேசி தீர்வுகாண குழு அமைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக, கால்ஷீட் குளறுபடி, முன்பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக, 5 முன்னணி நடிகர்கள் மீது, நடிகர் சங்கத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த நடிகர்கள் யார் என்பதனை பின்னர் அறிவிப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கூறினாலும், ஊடகத்தில், அது, சிம்பு, விஷால், அதர்வா, S.J.சூர்யா மற்றும் யோகி பாபு ஆகியோர் தான் என கூறப்படுகிறது.