பிப்ரவரி 1 முதல், ஹோட்டல் பிசினஸில் களமிறங்கும் பிரியா பவானிஷங்கர்; விபரங்கள் உள்ளே
இளம் கோலிவுட் நடிகையான பிரியா பவானிஷங்கர், புதிதாக ஹோட்டல் பிசினஸில் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். சொந்தமாக ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், அந்த கனவை நனவாக்க போவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தற்போது அந்த உணவகத்தை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி, வரும் பிப்ரவரி 1 -ஆம் தேதி, சென்னையில் 'Liam's Diner' எனப்பெயரிட்டுள்ள அந்த உணவகம், சென்னையிலுள்ள மேடவாக்கத்தில் திறக்கப்பட உள்ளது. பிரியா பவானிஷங்கர் சமீபமாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அதோடு, SJ சூர்யாவிற்கு ஜோடியாக 'பொம்மை' என்ற படத்திலும் நடித்துள்ளார். அப்படத்தின் முதல் பாடல் நேற்று (ஜனவரி 27) வெளியானது.